Viswasam Teaser Secrets

Viswasam Teaser Secrets  : விஸ்வாசம் டீஸர் எப்போது என சிறுத்தை சிவா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் அனைவருமே விஸ்வாசம் டீஸருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிறுத்தை சிவா வெளியிட்டுள்ள அப்டேட் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஆம், அது என்னவென்றால் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இவரிடம் விஸ்வாசம் டீஸர் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர்.

அதற்கு சிவா இன்னும் 10 நாட்களுக்குள் டீஸர் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் சிவா மறைமுகமாக சொன்ன தினம் புத்தாண்டாக ( ஜனவரி 1 ) ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.