Viswasam Re Release

Viswasam Re-Release : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் விஸ்வாசம் திரைப்படம் ஓரிரு தியேட்டர்களில் ரி- ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படத்தை KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் செய்திருந்தது.

தப்பான தளபதியின் கணக்கு, படக்குழு எடுத்த அதிரடி முடிவு – தளபதி 63-ன் அதிர்ச்சி அப்டேட்.

தமிழில் மிக பெரிய வசூல் வேட்டையாடிய இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 75 நாட்களுக்கும் மேலாக பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டது.

இதனையடுத்து தற்போது இப்படம் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்குவில் ஓரிரு தியேட்டர்களில் ரி ரிலீஸாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக சென்னை தாம்பரத்தில் உள்ள நேஷனல் தியேட்டரில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ மையூரி தியேட்டரில் தெலுங்குவில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.