Thalapathy-63

Vijay 63 Shooting : தளபதி 63 படத்தை பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி விஜய் கணக்கு இப்படி தப்பாகிடுச்சே என வருத்தப்பட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நடந்து வந்தன. ஆனால் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் தான் படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடத்தலாம் அப்போது தான் தமிழ்நாட்டு தொழிலார்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருந்தார்.

ஆனால் தினம் தினம் ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தொந்தரவு செய்து வருவதால் திட்டமிட்டபடி படப்பிடிப்புகளை முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லையாம்.

இதனால் இனி நடைபெற உள்ள படப்பிடிப்புகளை பொது வெளிகளில் நடத்தாமல் அரங்குகளில் நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.