Viswasam in Sun TV

திடீரென ட்விட்டரில் விஸ்வாசம் என்ற டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Viswasam in Sun TV : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, கோவை சரளா, ரமேஷ் திலக், சாக்ஷி அகர்வால் என பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அவரோட நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன மனுஷன்?? அஜித்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன. இந்த படம் தொலைக்காட்சி சேனலில் முதல் முறையாக ஒளிபரப்பான போது டி ஆர் பி யில் அடித்து தூக்கியது.

தற்போது மூன்றாவது முறையாக சன் டிவியில் வரும் ஜூலை 12ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த முறையும் டி ஆர் பி எல் மாஸ் காட்டும் என கூறுகின்றனர்.