VIswasam Collection

Viswasam Collection : விஸ்வாசம் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து நடித்திருந்த படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி ஆகிடுச்சு – பேட்ட குறித்து ரஜினிகாந்த் பேட்டி.!

குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் என்ற வகையில் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியில் இருந்தும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் ரிலீசாகி இருந்தாலும் வசூலிலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.

அஜித்திற்காக இப்படியா செய்வது? – பதபதைக்க வைக்கும் வீடியோ.!

இந்நிலையில் தற்போது மூன்றே நாளில் இப்படம் உலகம் முழுவதையும் சேர்த்து ரூ 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.