Viswasam Ajith

Pett Rajinikanth : உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி ஆகிடுச்சு என பேட்ட படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்திருந்தன.

ராட்சசன் மாதிரி ஓட வேண்டிய படம், இப்படி ஆகிடுச்சே – வருத்தத்தில் பிரபல நடிகர்.!

இரண்டு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை வந்தடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது படத்தை பற்றி மக்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

காளியின் ஆட்டம் ஜெயித்ததா? – பேட்ட விமர்சனம்.!

அதற்கு ரஜினிகாந்த் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி நடிக்க வச்சுட்டாங்க என கூறியுள்ளார்.

மிகவும் இளமையான துள்ளலான தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காட்டியதால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.