Viswasam Bo Records

Viswasam BO Reports : வசூலில் விஸ்வாசம் படம் புதிய சாதனை படைத்திருப்பதை இப்படத்தை ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது.

ரசிகர்களை கடந்து சாதனை படைத்த விஸ்வாசம் – போலீஸ் அதிகாரியின் அதிரடி ட்வீட்.!

குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இப்படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இன்று வரை அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வெறும் 8 நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 125 கோடி வசூல் செய்து விட்டதாக அறிவித்துள்ளது.

தலயா? தளபதியா? – இணையத்தை கலக்கும் கல்லூரி மாணவர்களின் அலப்பறை.!

இதனை தல ரசிகர்கள் #Viswasam125CroresVettai என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.