Viswaasam Producer is Unhappy : Lady Superstar Nayanthara, Thala Ajith, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Viswaasam Producer is Unhappy :

இப்படத்தை விநியோகம் செய்த கே.ஜே. ஆர் ராஜேஷ், இப்படத்தில் கிடைத்த ஷேரை இன்னும் தயாரிப்பாளருக்கு திருப்பி தரவில்லையாம்.

அஜித் நடிப்பில் வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் விஸ்வாசம். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

இரட்டை வேடத்தில் தளபதி, பட்டய கிளப்பும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ரிலீஸ் தேதியும் வெளியானது.!

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது.

உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளரோ தற்போது வேதனையில் இருக்கிறார். காரணம் இப்படத்தை விநியோகம் செய்த கே.ஜே. ஆர் ராஜேஷ், இப்படத்தில் கிடைத்த ஷேரை இன்னும் தயாரிப்பாளருக்கு திருப்பி தரவில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் மேலும் ராஜேஷ் மீது சங்கத்தில் புகார் கொடுக்கும் அளவு அவர் யோசித்து வருகிறாராம்.

கே.ஜே.ஆர் ராஜேஷ் நடிகை நயன்தாராவின் மேனேஜராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.