நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது கட்ட குஸ்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை” என்று’ லால் சலாம்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.