தளபதி 69 படத்தை இயக்கியே தீருவேன் என பிரபல நடிகர் ஒற்றை காலில் நிற்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மேலும் ஒரே ஒரு படத்தில் நடித்து அதன் பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து வெளியேறுகிறார்.
2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியின் மூலம் அரசியலில் களமிறங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கப் போகிறார் என பேச்சு அடிபட தொடங்கிய நிலையில் அடுத்து அவர் என்னை வெற்றிமாறன் என தகவல் பரவியது. வாடிவாசல் படத்தை ட்ராப் செய்துவிட்டு அதே கதையை வைத்து விஜயை இயக்கப் போகிறார் என கூறப்பட்டது.
மேலும் இல்லை அட்லி தான் இயக்குவார் எனவும் தகவல் பரவியது. இப்படி ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது நடிகர் விஷால், விஜய் வைத்து படத்தை இயக்கியே தீருவேன் என ஒற்றை காலில் நிற்பதாக புதிய உருட்டு பரவத் தொடங்கியுள்ளது.
ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை எனவே பலரும் கூறி வருகின்றனர். தளபதி 69 படத்தை யார் இயக்கினால் பர்ஃபெக்டாக இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.