நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கான போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.