vishal manager Harikrishnan Admitted To Hospital
vishal manager Harikrishnan Admitted To Hospital

மயங்கி விழுந்த விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தது.

இந்த நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பரும் தேவி அறக்கட்டளை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹரி கிருஷ்ணன் அவர்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவர் சென்னையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிரெட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.