பள்ளியில் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடியதை குறிப்பிட்டு நடிகர் விஷால் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் காரைக்குடி அருகே தெக்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அவர், “ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது, காரைக்குடியில் இருந்து 30 நிமிட தூரத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் உள்ள எஸ்.வி.ஏ பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் தரம் 5 வரை 210 பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு அற்புதமான தருணம் கடவுளுக்கு நன்றி”. என குறிப்பிட்டு புகைப்படங்களுடன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.