Vinoth Tension on Valimai Shooting
Vinoth Tension on Valimai Shooting

வலிமை கதையில் ஏற்பட்ட மாற்றத்தால் வினோத் உச்சகட்ட டென்ஷனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vinoth Tension on Valimai Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க வேண்டும் என அஜித் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார். இதனால் அடுத்த வருடம் ஜனவரியில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லூசுங்களா டா நீங்க.. அஜித் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா – பரபரப்பை ஏற்படுத்திய பதிலடி

இது ஒருபுறமிருக்க தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளதால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது.

அதற்கான லொக்கேஷனை தேடும் பணியில் வினோத் ஈடுபட்டுள்ளார். ஆனால் வெளி நாடுகளுக்கு இணையாக டெல்லியில் எந்த இடமும் செட்டாகவில்லை. திட்டமிட்ட காட்சிகளை வெளிநாடுகளில் தான் படமாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எச். வினோத் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் உச்சகட்ட டென்ஷனில் இருந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் வலிமை திரைப்படத்தின் நிலை என்னவாகும் என்ற குழப்பமும் அஜித் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.