Valimai
வலிமை படத்தின் அப்டேட் இனி படக்குழு சொல்லாமல் தெரிந்து கொள்வது என்பது சற்று சிரமமான விசியம் தான். ஏனென்றால் வினோத் போட்டியிருக்கும் தடை அப்படி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார்.

இதற்கு முன்பாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படம் ரிமேக், இந்த படம் வினோத்தின் சொந்த கதை. அதுவும் பிரஷ்ஷான போலீஸ் ஸ்க்ரிப்ட்டாக உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஒரு போதும் இந்த படத்தின் கெட்டப்பில் அஜித்தின் புகைப்படங்கள் லீக்காகி விட கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் வினோத்.

இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என யாரும் செல்போனை பயன்படுத்த கூட ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டுள்ளாராம்.

இதனால் அஜித் ரசிகர்கள் நீங்களும் அப்டேட் கொடுக்க மாட்டீங்க, அப்டேட் கொடுக்க போட்டோ எடுக்கறவங்களையும் விட மாட்டீங்க போலயே என்ற புலம்பலுடன் எங்களுக்கு படம் மாஸாக கெத்தா வந்தா போதும் என கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.