by election
நடைபெற்று முடிந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்தன.இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

இதில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதையை நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 51,786 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், திமுக வேட்பாளர் 31,859 வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,316 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 14,168 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் 9,775 வாக்குகளும், நாம் தமிழர் 428 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இறுதியாக விக்கிரவாண்டி அதிமுக 44551 வாக்குகள் வித்தியாசத்தில் மற்றும் நாங்குநேரி 12507 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது.

அதிமுகவினர் இனிப்பு கொடுத்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.