நிஹால், சிரி பிரகலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ளது விஜயானந்த் திரைப்படம்.

படத்தின் கதைக்களம் : கர்நாடகாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

அப்பா நடத்தி வந்த ப்ரிண்ட்டிங் தொழிலை கற்று தர வாழ்க்கையில் ஜெயிக்க இன்னும் சில தொழில்களும் தேவை என அப்பாவின் பேச்சை மீறி கடனை வாங்கி லாரி பிசினஸ் செய்து முதலில் நஷ்டத்தை சந்தித்து பிறகு எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் : விஜய் சங்கேஸ்வராக நிஹால் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரகலாத் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

வாழ்க்கை வரலாற்றை பேசும் கதையாக இருந்தாலும் அதை அழகாகவும் கச்சிதமாகவும் கொண்டு சென்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.