மனோஜ்க்கு வட்டியுடன் பணம் திரும்ப கிடைத்தும் அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஜீவாவின் வக்கீலிடம் அவங்ககிட்ட பேசி புரிய வையுங்கள் என்று சொல்ல அவர் ஜீவாவை தனியாக அழைத்து வருகிறார்.
ஜீவா என்ன சார் சீக்கிரம் எப்படி ஆச்சு என்னை இருந்து அனுப்பி வைங்க என்று சொல்ல நீங்கள் வசமா மாட்டிக்கிட்டீங்க இங்க இருந்து தப்பிக்கவே முடியாது. காய வச்சிட்டு சும்மா இல்லாம ப்ராப்பர்ட்டி வாங்க வந்தேன், பிசினஸ்க்கு லோன் வாங்க வந்தேனு எல்லாத்தையும் போல இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்ச பிறகு அவங்க எப்படி சும்மா இருப்பாங்க நீங்க காம்ப்ரமைஸா போறது தான் ஒரே வழி என்று சொல்கிறார்.
ஜீவா நான் எதுக்கு சார் பணத்தை கொடுக்கணும் நான் என்ன தப்பு பண்ணேன் என்று கேட்க லாயர் அவங்க கிட்ட பேசறதுக்கே என்கிட்ட பேசாதீங்க நீங்க என்ன பண்ணீங்கனு எனக்கு எல்லாமே தெரியும். பணம் கொடுக்கலனா உங்க பாஸ்போர்ட் லாக் ஆகிடும் நீங்க கனடா போக முடியாது கோர்ட் கேஸ்னு இழுத்துட்டு தான் இருப்பாங்க. நீங்கதான் பணத்தை தூக்கிட்டு ஓட நீங்க என்றது கன்ஃபார்ம் ஆயிடுச்சுனா அப்போ ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் ஜீவா பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.
மறுபக்கம் மீனா வண்டி கிடைக்குமா கிடைக்காதா என்று முத்துவிடம் கேட்டுக் கொண்டே இருக்க முத்து கொஞ்சம் அமைதியா இரு மீனா, தப்பு நம்ம பேர்ல கொஞ்சம் காத்திருந்துதான் ஆகணும் என்று சொல்கிறார். அடுத்து உள்ளே வந்த லாயர் நாங்க பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல ரோகினி 27 லட்சம் கொடுத்தா போகாது இவ்வளவு நாளா அந்த பணத்தை வைத்துக்கொண்டு இருந்ததற்கு வட்டியோட சேர்த்து 30 லட்சமாக கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார். லாயர் அதற்கு ஓகே என்று சொல்லி டாக்குமெண்டை ரெடி பண்ண சொல்கிறார்.
பிறகு நாங்க சமரசம் எல்லாம் போயிடுறோம் இனி எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போட சொல்ல மனோஜ் கையெழுத்து போடப்போகும் சமயத்தில் ரோகினி தடுத்து நிறுத்தி இன்னும் பணமே வரலையே என்று கேட்க போலீஸ் அனுப்பி விடுமா என்று சொன்னதும் ஜீவா பணத்தை அனுப்ப பிறகு மனோஜ் கையெழுத்து போடுகிறார்.
அதன் பிறகு மனோஜ்க்கு சாட்சியாக ரோகிணி கையெழுத்து போட ஜீவாவுக்கு சாட்சியாக கையெழுத்து போட யாரும் இல்லாத நிலை ஏன் கான்ஸ்டபிள் அவரை வெளியே கூட்டி வர முத்து ஜீவாவை பார்த்துட்டு மேடம் நீங்க என்ன இங்கே என்று கேட்க கான்ஸ்டபிள் சாட்சி கையெழுத்து போடணும் நீ கொஞ்சம் போடு என்று சொல்லி கையெழுத்து வாங்கி கொள்கிறார்.
அடுத்ததாக ட்ராபிக் போலீஸ் வந்துவிட்டால் முத்து அவரைப் பார்க்க இன்னொரு ரூமுக்குள் செல்ல பணத்துடன் மனோஜ் ரோகினி ஸ்டேஷனில் இருந்து வெளியே வருகின்றனர். பிறகு முத்து பையனை கட்டிவிட்டு வண்டியை எடுத்து மீனாவிடம் கொடுத்து அனுப்ப மனோஜ் மற்றும் ரோகிணி ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகின்றனர்.
மனோஜ் வீட்டுக்கு போனதும் அப்பாவோட பணம் எங்கேயும் போகல திரும்பி வந்துடுச்சுன்னு சொல்லிட்டு 27 நட்சத்திர முத்து மதத்தில் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்ல ரோகிணி உனக்கு அறிவில்லையா என்று திட்டுகிறார். முதல்ல கனடா போறதுக்கு பதினாறு லட்சம் ரூபாய் பணத்தை கட்டலாம் என்று சொல்லி அந்த ஏஜென்சிக்கு அழைத்து வருகிறார்.
ஆனால் அந்த வேலைக்கு வேறொருவரை அனுப்பியாச்சு எனவும் மனோஜ் இனிமே கன்னடா போக முடியாது இந்த வருஷத்தோட அவருடைய ஏஜ் பார் ஆகிடும் என்றும் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் மனோஜ் அப்செட் ஆக வேண்டிய வர ரோகிணி கவலைப்படாத இந்த பணத்தை வைத்து ஏதாச்சு பிசினஸ் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
வீட்ல 30 லட்சம் ரூபாய் பணம் வந்துச்சுன்னு சொல்ல வேண்டாம் அதே மாதிரி ஜீவா கிட்ட இருந்து பணம் வந்தது எனவும் சொல்ல வேண்டாம் எங்க அப்பா 15 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பினார்னு மட்டும் சொல்லு என்று சொல்கிறார். அவர்தான் ஜெயில்ல இருக்காரு அப்படி இருக்கும்போது எப்படி அனுப்புனார்ன்னு கேப்பாங்களே அதெல்லாம் நம்பற மாதிரி சொல்லணும் நீ வாய் திறக்காத நான் பேசிக்கிறேன் என்று சொல்லி அழைத்து வருகிறார் ரோகினி. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.