Vijay Watched Soorarai Potru
சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தில் தளபதி விஜய் பார்த்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

Vijay Watched Soorarai Potru : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் சம்மருக்கு ரிலீசாக உள்ளது.

இதனை அடுத்து தளபதி 65 படத்திற்காக அருண் ராஜா காமராஜ், பேரரசு, சுதா கொங்கரா என பல இயக்குனர்களிடம் கதை கேட்ட விஜய் முதலில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பச்சை கொடி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக விஜய் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு அதன் பிறகு யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுப்பது தான் இந்த படத்திற்கும் அப்படி தான் நடந்தது.

கதை கேட்டது மட்டுமில்லாமல் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தையும் காண்பிக்க சொல்லி அது அவருக்கு திருப்தியை கொடுத்ததால் தான் நடிக்க ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் மாஸ்டருடன் சம்மருக்கு தான் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.