
குணசேகரனை வளைத்து போட முயற்சி செய்துள்ளது விஜய் டிவி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் மாரி முத்து.
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் எதிர் நீச்சல் சீரியல் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்துள்ளது. மேலும் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து உள்ளார்.

இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அணுகி உள்ளனர். ஆனால் இவர் ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவும் பெரிய கேரக்டர் தான், அந்த கேரக்டரில் தான் இப்போது எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.
