புகழ் நடிச்சா படம் ஜெயிக்காதனு சொல்றாங்க.. வருத்தப்பட்ட விஜய் டிவி புகழ்..!

விஜய் டிவி புகழ் வருத்தப்பட்டு பேசி உள்ளார்.

தமிழ் சின்னதிரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வலிமை,எதற்கும் துணிந்தவன், யானை, அயோத்தி,நடிகர் சந்தானத்துடன் இணைந்து இரண்டு திரைப்படம் என சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹீரோவாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் புகழ் இந்த படம் குறித்து உருக்கமாக பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது அதாவது ட்ரைலரும் போட்டோவோ எது வந்தாலும் புகழ் இருக்கானா அந்த படம் ஓடாது என்றும் புகழ் இருந்தா இந்த படம் ஜெயிக்காது என்றும் சொல்றாங்க இது எனக்கு மட்டுமில்லை எல்லா நடிகர்களுக்கும் இப்படித்தான் நடக்குது இப்போ எதுவும் ஆர்கானிக் ஆக இல்லை இப்படி சொன்னால் தான் நாம் வெளியே தெரிவோம் என ஒரு கூட்டம் அலைஞ்சிகிட்டு இருக்காங்க என்னை தனிப்பட்ட முறையில் பண்ணா கூட பரவாயில்லை என்னை அப்படி பண்றதுனால அந்தப் படத்தில் நடிச்சவங்க அத்தனை பேரும் பாதிக்கப்பட்டவங்க அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு என்று பேசி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

