லால் சலாம் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பிரபல விஜய் டிவி நடிகர் கூறி இருக்கிறார்.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்னும் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வரும் நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த அனுபவத்தை விஜய் டிவியின் பிரபல நட்சத்திரமாக விளங்கும் தங்கதுரை அவர்கள் பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருக்கு வழங்கி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது அவரது வாழ்வில் புது திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.