
ஜீ தமிழ் புதிய சீரியல் கமிட்டான வேகத்தில் வெளியேறியுள்ளார் விஜய் டிவி நடிகை ஒருவர்.
தமிழ் சின்னத்திரையில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனல் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருகிறது.
சமீபத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் ரியா விஸ்வநாதன் நடிப்பில் சண்டக்கோழி சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றை நாயகி விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யா தொரட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

காதல் கதையாக ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் இவர் கமிட் ஆன வேகத்தில் வெளியேறியுள்ளார். காரணம் இந்த சீரியலில் நாயகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால் சரண்யா என்னால் அம்மாவாக நடிக்க முடியாது என சொல்லி சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சரண்யாவிற்கு தற்போது கிட்ட 35 வயதாகும் நிலையில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் ஒன்றும் தவறு இல்லையே என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.
