விஜய் டிவி சிவாங்கி 12ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மார்க் எடுத்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார். மூன்று சீசன்கள் கோமாளியாக பங்கேற்ற இவர் தற்போது நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

மேலும் வெள்ளி திரையிலும் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் சிவாங்கி 12ஆம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆமாம் பேட்டி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பில் 1200க்கு 1112 மதிப்பெண்கள் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் காலேஜ் படிக்கும் போது அதிகம் சூட்டிங் சென்று விட்டதால் நிறைய அரியர் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.