
விஜய்யின் ‘ஜன நாயகன்’ சூட்டிங்கே முடியலை, இப்பவே கலெக்ஷன் ரூ.75 கோடி வந்திருச்சு
‘ஜன நாயகன்’ படம் தற்போது ரூ.75 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இது பற்றிய தகவல் பார்ப்போம்..
தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். மேலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்ற, படத்தொகுப்பை பிரதீப் இ.ராகவ் மேற்கொள்கிறார். இப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், அதற்குள் வசூல் வேட்டையை ஜன நாயகன் திரைப்படம் தொடங்கியுள்ளது. அதாவது படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.
அவ்வகையில், ஜன நாயகன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை.
முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படம் ரூ.53 கோடிக்கு விற்பனை ஆகியிருந்த நிலையில், அதைவிட 22 கோடி கூடுதலாக ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. இது நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இச்சூழலில் ரூ.1000 கோடியை தொடும் முதல் தமிழ்ப்படம் ஜனநாயகனா? சூப்பர் ஸ்டாரின் கூலியா? என பொறுத்திருந்து பார்ப்போம்.!