Vijay Sri G Request to Sunny Leone
Vijay Sri G Request to Sunny Leone

பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுமாறு சன்னி லியோனுக்கு கோரிக்கை வைத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.

Vijay Sri G Request to Sunny Leone : தமிழ் சினிமாவில் 87 வயதில் சாருஹாசன் நாயகனாக நடித்த தாதா87 என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ ஜி.

இந்தப் படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பொல்லாத உலகில பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக சியான் விக்ரமின் மருமகன் அர்ஜுமனன் நடிக்கிறார்.

நாயகிகளாக புதுமுக நடிகைகள், பிக் பாஸ் ஜூலி, பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகி வரும் இந்தப் படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சன்னி லியோனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

OTT-ல் சூரரைப் போற்று ரிலீஸ் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் – சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி வைத்த கோரிக்கை.!!

அதாவது நீங்கள் பப்ஜி கேம் விளையாடுகிறீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினால் நன்றாக இருக்கும், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என கூறி தன்னுடைய படத்தில் நடனமாட முடியுமா என கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ-யின் இந்த கோரிக்கைக்கு சன்னி லியோன் பதில் என்னவாக இருக்கும் என படத்தின் இயக்குனர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே சன்னி லியோன் வடகறி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.