Director Hari Request to Suriya
Director Hari Request to Suriya

சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக OTT-ல் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இயக்குனர் ஹரி கோரிக்கை வைத்துள்ளார்.

Director Hari Request to Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யாவே தயாரித்துள்ளார்.

சூரரைப்போற்று திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அக்டோபர் 30ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

என் போட்டோவ வச்சு ஏமாத்து வேலை செய்யாதீங்க.. தயாரிப்பாளர்களுக்கு யோகி பாபு வைத்த கோரிக்கை – வீடியோ.!!

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என ரசிகர்கள் திட்டமிட்டிருந்தது எல்லாம் வீணாய் போனது.

இந்தநிலையில் தற்போது இயக்குனர் ஹரியும் சூரரைப்போற்று படத்தை OTT வழியாக வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மதிப்பிற்குரிய திரு சூர்யா அவர்களுக்கு, உங்களுடன் இணைந்து பணியாற்றிய உரிமையில் சில விஷயங்கள்..

ஒரு ரசிகனாக உங்களது படத்தை தியேட்டரில் தான் பார்க்க ஆசைப்படுகிறேன். OTT வழியாக அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கை தட்டல்களால் தான் நாம் இருவரும் இந்த உயரத்தில் இருக்கிறார். அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா என் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் தியேட்டர் என்ற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அடையாளம்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு சூர்யா ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சூர்யா தன்னுடைய சூரரைப்போற்று திரைப்படத்தை OTT வழியாக வெளியிட முயற்சியை கைவிட வேண்டும் என கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.