அமீர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Quite From AmirKhan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசும் வகையில் இருந்தால் அதில் நடித்து வருகிறார்.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அமீர்கான் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி - வெளியான அதிர்ச்சி காரணம்

ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1994ஆம் ஆண்டு பாரஸ்ட் கேம் என்ற பெயரில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த படம் இந்தியில் லால் சிங் சிட்டா என்ற பெயரில் உருவாகிறது. அமீர் கான் இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார். இதில் இரண்டாம் போர் காட்சிகள் இடம் பெறும்.

இதில் சக வீரராக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சொன்னபடி படப்பிடிப்புகள் நடைபெறாததால் இதை படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview