பிராங்க் விவகாரம், விஜய் சேதுபதி கேள்விக்கு தர்ஷிகா விளக்கம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
தர்ஷிகாவை கேள்வி கேட்டுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆட்டம் நகர்ந்து வருகிறது.
ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஒரு வாரத்தில் நடந்த விஷயங்களை சனி ஞாயிறு அன்று பேசி பஞ்சாயத்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாச்சனாவிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.
மேலும் அனைவரும் எதிர்பார்த்த பிராங்க் குறித்து விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி இருந்து வந்தது அந்த வகையில் தற்போது அதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. தர்ஷிகாவிடம் இது குறித்து விஜய் சேதுபதி பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
View this post on Instagram