நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்திருக்கும் நடிகை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் DSP, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது வரிசையாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “மேரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் இந்தியில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறாராம்.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ரஜினியின் கபாலி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை ராதிகா ஆப்தே சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.