மகிழ் திருமேனி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

முன்னதாக, தடையறத் தாக்க, மீகாமன், தடம், உள்பட பல த்ரில்லர் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் மகிழ். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பிறகு, மீண்டும் தனது பாணியில் ஒரு த்ரில்லர் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தை மிராக்கிள் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக ஷ்ரத்தா கபூர், வில்லனாக சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக கையெழுத்தாகவில்லை. இப்படத்தினை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறார் மகிழ். இறுதிகட்டப் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

Web Ad 2

முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘ட்ரெய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

 vijay sethupathi in magizh thirumeni next film
vijay sethupathi in magizh thirumeni next film