Vijay Sethupathi in KGF Director

பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi in KGF Director : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார்.

மேலும் மாஸ்டர் படத்தை பிறகு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் வைத்து சாலார் என்ற திரைப்படம் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் தற்போது கன்னட வில்லனான மது குருசாமி பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.