Master Vijay Sethupathi
மாஸ்டரில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜயும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேட்டன், ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்தில் விஜய் ஜேம்ஸ் துரை என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவரை செல்லமாக JD என்று அழைப்பார்கள் எனவும் தகவல்கள் கசிந்திருந்தன.

இதனையடுத்து தற்போது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது பவானி என்ற பெயரில் நடிக்கிறாராம். இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் பவானி என்பது பெண் பெயர் போல இருக்கே பா எனவும் சிலர் கமெண்ட் கூறியும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.