Vijay Sethupathi Character in Master
Vijay Sethupathi Character in Master

மாஸ்டர் படத்தில் குட்டி விஜய் சேதுபதி ஆக நடித்திருப்பது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Vijay Sethupathi Character in Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன், ரம்யா, தீனா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக்காக சிறுவயது கதாபாத்திரம் ஒன்றும் இப்படத்தில் இடம்பற்றுள்ளது. இந்த குட்டி பவானி கதாபாத்திரத்தில் (குட்டி விஜய் சேதுபதி) இளம் நடிகரான மகேந்திரன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமல்லாமல் மகேந்திரன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியே டப்பிங் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.