மீண்டும் விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி அதிரடி பதில் அளித்துள்ளார்.

Vijay Sethupathi About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும் என தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் வேதா படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அதனைத்தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். தளபதி விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (13.7.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் என்ற உலகளாவிய சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்து அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு விஜய் சேதுபதி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

2 வருஷம் தவம் இது.., வலிமை Motion Poster எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.