
எதிர்நீச்சல் இயக்குனர் சொன்ன கதையை கேட்டு நோ சொல்லியுள்ளார் தளபதி விஜய்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியல் இயக்கிய திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார்.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இயக்குனர் ஆவதற்கு முன்பாக திருச்செல்வம் இளையராஜாவிடம் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.
அப்போது இளையராஜா விஜயின் காதலுக்கு மரியாதை படத்திற்கு இசையமைத்த போது திருச்செல்வம் விஜயை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்ததால் இது எனக்கு செட்டாகாது என விஜய் நோ சொல்லியுள்ளார்.
இந்த தகவலை அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருச்செல்வம்.
