Vijay Ruled Twitter 2020

விஜய் வெளியிட்ட சிங்கிள் புகைப்படம் 2020இல் ட்விட்டரில் மிகப்பெரிய சாதனை படைத்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Ruled Twitter 2020 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றபோது விஜய் கேரவன் மீது தன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தேங்க்யூ நெய்வேலி என குறிப்பிட்டிருந்தார்.

இப்புகைப்படம் 2020-ல் அதிக ரீ ட்வீட்டுகளை பெற்ற புகைப்படமாக தேர்வாகி உள்ளதாக ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதோ அந்த அறிவிப்பு

ட்விட்டர் இந்தியா அதிகார பூர்வமாக வெளியிட்ட இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.