Vijay Phone Call to Rathnakumar
பிரபல இயக்குனருக்கு விஜய் போன் செய்து லோகேஷ் கனகராஜை போலவே பேசி பிராங்க் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்னகுமாரும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் இவருக்கு தளபதி விஜய் போன் செய்து மச்சி ஹாப்பி பர்த் டே டா என லோகேஷ் கனகராஜை போலவே பேசி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

இது குறித்து ரத்னகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்து நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.