அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஜய்.. புகைப்படம் இதோ..!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் தளபதி விஜய்.

Vijay paid tribute to Ambedkar statue by garlanding it

Vijay paid tribute to Ambedkar statue by garlanding it

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளான இன்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அவரது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதில் நமது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

சட்ட உரிமைகள் மட்டுமில்லை சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்கும் ஆனவை என்பதை வலியுறுத்தி தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை அவரைப் போற்றி வணங்குவோம் நம் சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்கி சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.