துணிவு பேனரை பார்த்து தளபதி விஜய் செய்த விஷயம் வைரலாகி வருகிறது.

Vijay Order on Varisu Movie Banner : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளனர்.

துணிவு பேனரை பார்த்து விஜய் போட்ட உத்தரவு.. பரபரவென நடந்த வேலை - என்ன நடந்தது தெரியுமா??

அஜித் நடிப்பில் துணிவு, தளபதி விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் துணிவு படத்துக்காக பெரிய பேனர் ஒன்று திரையரங்கு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

துணிவு பேனரை பார்த்து விஜய் போட்ட உத்தரவு.. பரபரவென நடந்த வேலை - என்ன நடந்தது தெரியுமா??

இதனை பார்த்த தளபதி விஜய் உடனடியாக சத்யம் திரையரங்கில் வாரிசு படத்துக்கு மிகப்பெரிய பேனர் வைக்க உத்தரவு விட்டதாகவும் அதற்கேற்ப அங்கு பெரிய பேனர் வைக்கப்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.