ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘ஜனநாயகன்’ விஜய் முக்கிய அறிவுறுத்தல்..

‘எந்த வேர்வைக்கு வெற்றிகள் வேர் வைக்கும்’ என்ற மாறா நம்பிக்கையில் சினிமாவிலும் அரசியலில் பயணிக்கும் விஜய்யின் தற்போதைய வைரலாகும் தகவல்கள் பார்ப்போம்..
நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் ‘ஜனநாயகன்’ விஜய். அவ்வகையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய் தெரிவிக்கையில், ‘நான் மதுரைக்கு வருவதை தெரிந்து கொண்ட மதுரை தவெக நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், நான் இப்போது மதுரைக்கு வந்தது, கொடைக்கானலில் நடைபெறும் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். மதுரை மக்களையும் நிர்வாகிகளையும் ரசிகர்களையும் வேறு ஒரு சந்தர்பத்தில் விரைவில் சந்திக்கிறேன். நான் இப்போது கொடைக்கானலுக்கு சென்று படக்குழுவினருடன் இணைய வேண்டும். நான் இங்கிருந்து கிளம்பி எனது வேலையை பார்க்க போகிறேன்.
அதேபோல், ரசிகர்களும் நிர்வாகிகளும் அவரவர் இல்லத்திற்கு பத்திரமாகச் செல்ல வேண்டும். யாரும் எனது காரை பின் தொடர்வது, பைக்கில் வேகமாக காரை துரத்துவதோ கூடாது. மேலும், சிலர் பைக்கில் வேகமாக வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வருகிறார்கள். பைக்கில் நின்று கொண்டு ஓட்டுகிறார்கள். இது போன்ற காட்சிகளை பார்த்தால், மனதிற்கு மிகவும் பதற்றமாக உள்ளது.
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்’ எனவும் பேசியுள்ளார். விஜய்யின் இந்நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் தற்போது வைரலாகி பரவுகிறது.