‘தல’ அஜித்துக்கு இன்று மிக ஸ்பெஷலான பர்த்டே: எப்படி தெரியுமா?

தொழிலாளர் தினமான இன்று, ஒரு சாதனையாளரின் பிறந்த நாளும் வந்துள்ளது. அவர் யாரென என்பது தெரிந்ததே. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்..
‘தல’ அஜித் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் கார் பந்தயத்தில் பிஸியாக கலந்துகொண்ட அஜித், தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடவும் சென்னை வந்துள்ளார். இச்சூழலில், டெல்லிக்கு பத்ம பூஷன் விருது வாங்க சென்றார். இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் நார்மலான செக்அப் பெற்று, தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்.
முன்னதாக துபாய், ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் கைகளால் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டார். எனவே, அஜித்திற்கு அடுத்தடுத்து சிறப்பான விஷயங்கள் நடந்துள்ளதால், இந்த பர்த்டே அவருக்கு மிகவும் ஸ்பெஷலான பர்த்டேவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், காதல் கணவர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷாலினி பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது, கடந்தாண்டு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷாலினி அவருக்கு ஒரு காஸ்ட்லி பைக் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அப்போது, அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பிறந்த நாளுக்கும் ஷாலினி அதே புகைப்படங்களை பதிவிட்டு “அந்த நினைவுகளை மறக்கவே முடியாது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சுமார் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தல’ விரைவில் அறிவிப்பு வெளியிடுவாரா?
