13 வருடங்கள் கழித்து உதயநிதியுடன் கூட்டணி சேர உள்ளார் தளபதி விஜய்.

Vijay Joins With Udhayanidhi Stalin : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

13 வருடங்கள் கழித்து உதயநிதி உடன் கூட்டணி சேரும் தளபதி விஜய்.. காரணம் இதுதானா? பரபரப்பைக் கிளப்பிய தகவல்

இந்தப் படத்தைத் தொடர்ந்து வளர்த்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். அதன் பின்னர் தளபதி விஜய் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

கடந்த 2008 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின்தான் தயாரித்திருந்தார். விஜய் கொடுத்த ஐடியாவில் பெயரில்தான் உதயநிதி அப்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக சொல்லப்பட்டது.

Simbu நடிப்பை பார்த்து கண்டிப்பா அழுவீங்க! – Director Venkat Prabhu Speech | Maanadu Audio Launch

இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை அழைத்து அவரிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஜய் நடிக்க முன்னணி இயக்குனர்களிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிற சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். மேலும் ஐ ரைட் பிரச்சனையின் போது அவருக்கு திமுக ஆதரவாக பேசியது. விஜய்யின் பிறந்தநாளில் உதயநிதி அவரை தளபதி எனக் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதன் காரணமாக தளபதி விஜய் மீண்டும் உதயநிதி தயாரிப்பில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.