‘ஜனநாயகன்’ விஜய் குறித்து, வில்லன் நடிகர் பாபி தியோல் சொன்ன தகவல்
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட வில்லன் வாய்ஸ் பார்ப்போம்..
பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். இவர் ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான், தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைய வைத்தது.
இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அரசியலை பேசும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பீஸ்ட் படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத்தின் இசையில் அரசியல் ரீதியான கொள்கை பாடல்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இச்சூழலில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், தளபதி விஜய் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
‘விஜய் ஸ்வீட் ஹார்ட்டாக இருக்கிறார். அவர் மிகவும் எளிமையாக பழகுகிறார். தன்னடக்கம் கொண்ட மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தளபதி குறித்து, பாபி தியோல் கொடுத்த தகவலுக்கு ‘நன்றி’ தெரிவித்து வருகின்றனர் விஜய் ஃபேன்ஸ்.!