Vijay Helps his Uncle to Produce his film | Kollywood | Thalapathy 64 | Vijay | Thalapathy 63 | Lokesh Kanagaraj | Sarkar | Mersal

Vijay Helps his Uncle to Produce his film :

விஜய்யை வைத்து ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகன் போன்ற படங்களை தயாரித்த பிவி கம்பைன்ஸ் நிறுவனம்தான் தளபதி 64 படத்தை தயாரிக்கிறதாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பட ரிலீஸுக்கு பின்னும் விஸ்வாசம் படைத்த சாதனை – இது வேற லெவல் தான்.!

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்யை வைத்து ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகன் போன்ற படங்களை தயாரித்த பிவி கம்பைன்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறதாம்.

ஆரம்ப காலக்கட்டத்தில் தன்னை வைத்து படம் எடுத்ததற்காக அவர்களுக்கு விஜய் தற்போது கால்ஷீட் வழங்கியுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.