
விஜய் கொடுத்த வைர நெக்லஸ் குறித்து நந்தினி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமில்லாமல் விஜய் வரும் சட்டமன்ற தேர்தல் முதல் அரசியலின் களமிறங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் பல தளபதி விஜய் சமீபத்தில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.

மேலும் 12 ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி பாராட்டி வைர நெக்லஸை பரிசாக கொடுத்தார். இந்த நிலையில் தற்போது விஜய் உடனான சந்திப்பு குறித்து நந்தினி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
விஜய் சாரை சந்திக்கப் போறேன் என தெரியும் ஆனால் அவர் வைர நெக்லஸை பரிசாக கொடுப்பார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதுவரை நான் தங்கத்தில் கூட நெக்லஸ் அணிந்தது கிடையாது அதற்கான வசதியும் எங்கள் குடும்பத்தில் இல்லை. அப்படி இருக்கும் போது விஜய் கொடுத்த வைர நெக்லஸை பொக்கிஷம் போல பாதுகாப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் சாரோட சந்திப்பேன் மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்ததாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
