லியோ படத்தின் டிரைலரை வெளியிட்ட ரோகிணி தியேட்டரை சூரையாடியுள்ளனர் ரசிகர்கள்.

Vijay Fans Atrocities in Leo Trailer Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடக்கும் என அறிவிப்பு வெளியாகி கடைசி நேரத்தில் ஆடியோ லாஞ்ச் இல்லை என ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது படக்குழு.

அவர்களை ஓரளவுக்கு கூலாக்கும் வகையில் நேற்று மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ட்ரெய்லரை ரோகிணி திரையரங்கத்திலும் வெளியிட்டிருந்தனர்.

இதனால் திரையரங்கிற்குள் அலைமோதிய விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் அங்கிருந்த நாற்காலிகளை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.