ஓடும் ரயிலில் பிரபல நடிகையின் மடியில் படுத்திருக்கும் விஜய் தேவர் கொண்டாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் விஜய் தேவர் கொண்டா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் “Liger”. இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். இதில் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் விஜய் தேவர்கொண்டவுடன் இணைந்து பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனின் இணைந்து நடித்திருக்கிறார்.

பிரபல நடிகையோடு ஓடும் ரயிலில் நெருக்கம் காட்டும் விஜய் தேவர் கொண்டா? - அந்த நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படம்.!

இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடிக்க ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபல நடிகையோடு ஓடும் ரயிலில் நெருக்கம் காட்டும் விஜய் தேவர் கொண்டா? - அந்த நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படம்.!

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தை பற்றி இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள்.

பிரபல நடிகையோடு ஓடும் ரயிலில் நெருக்கம் காட்டும் விஜய் தேவர் கொண்டா? - அந்த நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படம்.!

அதில் ஒரு பகுதியாக மும்பையில் இயங்கும் மின்சார ரெயிலில் இருவரும் பயணித்து, ‘Liger’ படத்திற்கான புரமோஷனில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அனன்யா பாண்டேவின் மடியில் விஜய் தேவரகொண்டா படுத்திருக்கும் புகைப்படத்தை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.