விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் செலவு ரூ.25 கோடி?
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. திருமணம் செய்யவுள்ளனர். மார்ச் மாதம் 4-ந்தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் என்பவருக்குச் சொந்தமானது. இந்த தீவு தான் உலகிலேயே அதிக பொருளாதார செலவில் வாடகைக்கு விடப்படும் ஹனிமூன் தீவு ஆகும்.
இந்த தீவில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 80 பேர் வரை தங்க முடியும் என்றும், தேவைப்பட்டால் ஹனிமூனுக்கும் வாடகைக்கு விடப்படும் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஒரு நாளைக்கு தங்க இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் வரை செலவு ஆகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவர் மட்டும் தங்க ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடிகள் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல், இந்த தீவில் இருக்கும் அரண்மனையில் உலகத்தரம் வாய்ந்த சமையல் கலைஞர்கள், மசாஜ். ஸ்பா, ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் என பலரும் உள்ளார்கள். 24 மணி நேரமும் இந்த தீவில் சர்வீஸ் இருந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
