எனக்கு இரண்டாவது திருமணமா? கோபத்தில் கொந்தளித்த நடிகை மீனா..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல் கேட்டு மீனா கோபப்பட்டுள்ளார்.

Second marriage for me Angry actress Meena..!
Second marriage for me Angry actress Meena..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, அன்புடன், அன்புள்ள ரஜினிகாந்த், ஆளுக்கு ஒரு ஆசை, ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, உளவுத்துறை, என் ராசாவின் மனசினிலே, எஜமான் ,ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரோஸ்லின் என்ற வெப் சீரிசிலும் நடித்துள்ளார்.மீனாவுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் அது கணவர் மறைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபமாகவே வதந்திகள் பரவி வருகிறது இதனைக் கேட்ட மீனா கோபப்பட்டு பதிலளித்துள்ளார்.

எனக்கு இரண்டாவது திருமணம் என்று பரவும் வதந்தியை கேட்டு என் மனம் காயப்படுகிறது. உண்மைத்தன்மை எதுவும் இல்லாமல் நான் ஒரு செலிபிரிட்டி நான் ஒரு பெண் நான் சிங்கிளா இருக்கறதுனால என்ன வேணாலும் பேசிடலாம்னு நினைக்கிறாங்க கேக்குறதுக்கு ஆள் இல்லனா என்ன வேணா பேசிடலாமா என்ற கேள்வி கேட்டுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் இதுவரை பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Second marriage for me Angry actress Meena..!
Second marriage for me Angry actress Meena..!